உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாசிமக தீர்த்தவாரி உற்சவம் கடப்பாக்கத்தில் விமரிசை

மாசிமக தீர்த்தவாரி உற்சவம் கடப்பாக்கத்தில் விமரிசை

செய்யூர:செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கடப்பாக்கம் கடற்கரை பகுதியில், ஆண்டுதோறும் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் விமரிசையாக நடக்கும்.இதில், கடப்பாக்கம் காசி விஸ்வநாதர் கோவில், நரசிம்ம பெருமாள் கோவில் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான விளம்பூர், கரும்பாக்கம், கோட்டைக்காடு, வெண்ணாங்குப்பட்டு, கடுக்களூர் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள கோவில்களில் இருந்து, சுவாமிகள் சிறப்பு அலங்காரத்துடன் கடற்கரைப் பகுதிக்கு வந்து நீராடி, தீர்த்தவாரி உற்சவம் நடக்கும்.அதேபோல 84ம் ஆண்டு மாசி மக உற்சவம் நேற்று, கடப்பாக்கம் பகுதியில் வெகு விமரிசையாக நடந்தது.கடலோரத்தில் 20 அடி அகலத்தில், 200 அடி நீளத்திற்கு அமைக்கப்பட்டு இருந்த பந்தலில், சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வந்த சுவாமிகள், கடற்கரை நோக்கி நிறுத்தப்பட்டு கடலில் நீராடி, தீபாராதனை காட்டப்பட்டது.இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்து, கடற்கரையில் நீராடி மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி