உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லுாரி பட்டமளிப்பு விழா

மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவக்கல்லுாரி பட்டமளிப்பு விழா

மேல்மருவத்துார்:மேல்மருவத்துார் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லுாரியில், அறம் 24 பட்டமளிப்பு விழா, ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவரும், மருத்துவக் கல்லுாரியின் தாளாளருமான அன்பழகன் தலைமையில், நேற்று நடந்தது. துணை தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். மருத்துவக்கல்லுாரி முதல்வர் டாக்டர் கண்ணன் வரவேற்றார். தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் நாராயணசாமி பங்கேற்று, முதுகலை மற்றும் பட்டம் பெற்ற மாணவ - மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.பின், அவர் பேசியதாவது:ஆதிபராசக்தி மருத்துவக்கல்லுாரி மாணவர்கள், ஆன்மிகத்தோடு மருத்துவக்கல்வியை படித்துள்ளனர். இவர்கள் வாழ்க்கையில் பல்வேறு நிலைகளை அடைந்து, சிறப்பான இடத்திற்கு வருவர். பெற்றோரையும், ஆசிரியர்களையும் என்றைக்கும் மறக்காமல், மதித்து நடக்க வேண்டும். விடாமுயற்சி இருந்ததால், உயர் கல்வியில் பல்வேறு சாதனைகளை படைத்து, வெற்றி பெற முடியும். இவ்வாறு அவர் பேசினார். ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை கமிஷனர் அனந்தகுமார், ஆதிபராசக்தி மருத்துவமனையின் இயக்குனர் ரமேஷ், ஆதிபராசக்தி பாராமெடிக்கல் கல்லுாரியின் தாளாளர் ஸ்ரீலேகா, ஆதிபராசக்தி மருத்துவக்கல்லுாரி செயலர் மதுமலர், முதன்மை செயலர் பிரசன்ன வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்