மேலும் செய்திகள்
வீட்டின் பூட்டை உடைத்து 4.5 சவரன் நகை திருட்டு
2 hour(s) ago
ஊஞ்சல் உத்சவம்
2 hour(s) ago
வட மாநில வாலிபரை தாக்கி பணம் பறித்தவர் கைது
2 hour(s) ago
இன்று இனிதாக (நாள்/31/12/2025/புதன்)
2 hour(s) ago
மதுராந்தகம்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த ஏரி, 36 ஏக்கர் பரப்பளவு உடையது. நீர்மட்டம் 16 அடி உயரம். தற்போது, 4 அடிக்கு தான் தண்ணீர் உள்ளது.வங்கதேசம், இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா, மியான்மர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பறவைகள் வேடந்தாங்கலுக்கு வலசை வருகின்றன.குறிப்பாக, செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில், குளிர்காலத்தில் பறவைகள் வலசை வர துவங்குகின்றன. டிச, ஜன, பிப்., மாதத்தில் வலசை வரும் பறவைகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். இனப்பெருக்கம் முடிந்து, மார்ச், ஏப்., மே மாதத்தின் கடைசி வாரத்தில் பறவைகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படும்.கூழைக்கடா, கரண்டி வாயன், நத்தை குத்தி நாரை, பாம்பு தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, முக்குளிப்பான், மற்றும் வக்கா, புள்ளி மூக்கு வாத்து, வர்ண நாரை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் இங்கு வலசை வந்தன. 40,000த்திற்கும் அதிகமான பறவைகள், வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்து, இரண்டு மடங்காக மீண்டும் தங்கள் தாய் நாட்டிற்கு புறப்பட்டு செல்கின்றன.இரவு நேரத்தில் கூட்டம், கூட்டமாக வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இருந்து, தங்கள் தாய் நாட்டிற்கு பறவைகள் சென்ற வண்ணம் உள்ளன. தற்போது, 13,000த்துக்கும் குறைவான பறவைகளே உள்ளன.சைபீரியா, ஆஸ்திரேலியா, மியான்மர் மற்றும் பங்களாதேஷ் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வர்ண நாரை, கூழைக்கடா, மிளிர் உடல் அரிவாள் மூக்கன், பாம்பு தாரா உள்ளிட்ட சில பறவை இனங்களே, தற்போது உள்ளன.பள்ளி கோடை விடுமுறை காலம் என்பதால், பெற்றோர்களுடன், பள்ளி குழந்தைகள், வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வந்து மிச்சமிருக்கும் பறவைகளை பார்த்து ரசிக்கலாம்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago