உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின் பிரச்னைக்கு உடனடி தீர்வு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

மின் பிரச்னைக்கு உடனடி தீர்வு அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் மற்றும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் கூட்டம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்ரபசன் தலைமையில், நேற்று நடந்தது.இதில், 453 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். அதன்பின், அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:செங்கல்பட்டு மாவட்டத்தில், மின் அழுத்த குறைபாடு, மின்கம்பங்கள் மாற்றம் கோரி, அதிகமான மனுக்கள் வந்துள்ளன. இப்பிரச்னைக்களுக்கு உடனடியாக தீர்வு காண, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரடியாகச் சென்று, மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அனைத்து துறை அதிகாரிகளும் இணைந்து செயல்பட்டு, மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி