மேலும் செய்திகள்
சாலையோரம் குப்பை எரிப்பு: வாகன ஓட்டிகள் தவிப்பு
02-Mar-2025
சிங்கபெருமாள்கோவில்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள்கோவில் ஊராட்சியில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி திருத்தேரி தாங்கல் ஏரியில், தொடர்ந்து பிளாஸ்டிக் மற்றும் கழிவு பொருட்கள் கொட்டப்பட்டு வருகின்றன. இந்த குப்பையை, மர்ம நபர்கள் அடிக்கடி தீ வைத்து எரிப்பதால், வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.இந்நிலையில், அங்கு கொட்டப்பட்டு இருந்த குப்பைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர்.குப்பை கொழுந்து விட்டு எரிந்ததால், சாலை முழுதும் புகை மண்டலமாக மாறியது.இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் கண் எரிச்சல், சுவாச கோளாறு போன்ற பிரச்னைகளால் அவதியடைந்தனர்.மேலும், சாலை ஓரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கனரக வாகனங்கள் தெரியாமல், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டது. இதுபோல, அடிக்கடி இப்பகுதியில் குப்பை எரிக்கப்படுகிறது.எனவே, சாலை ஓரம் குப்பை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், குப்பையை தீ வைத்து எரிக்கும் மர்ம நபர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
02-Mar-2025