உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரயில்வே கேட் பழுதால் வாகன ஓட்டிகள் அவதி

ரயில்வே கேட் பழுதால் வாகன ஓட்டிகள் அவதி

மறைமலை நகர், : சிங்கபெருமாள் கோவில் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரயில்வே கேட், நேற்று மாலை 6:00 மணிக்கு திடீரென பழுதடைந்தது.இதனால், சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் சாலை, திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இரண்டு கி.மீ., துாரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் அணிவகுத்து நின்றன. காத்திருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களை தண்டவாளத்தில் இயக்கி, சற்று தொலைவில் உள்ள மாற்று பாதையில், ஆபத்தான முறையில் சென்றனர்.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:இந்த ரயில்வே கேட் அடிக்கடி பழுதடைந்து வருகிறது. இதனால், ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு வேலைக்கு சென்று திரும்புவோர் அவதியடைகின்றனர்.அதேபோல், தினமும் ரயில்கள் சென்ற பத்து நிமிடங்கள் கழித்து தான், ஒவ்வொரு முறையும் இந்த கேட் திறக்கப்படுகிறது.ரயில்வே ஊழியர்கள், வட மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருப்பதால், முறையாக பதில் அளிப்பதில்லை. நேற்று மாலை ரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வரவில்லை.ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்பும் செய்யவில்லை. எனவே, ரயில்வே கேட் பிரச்னைக்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ