| ADDED : ஜூலை 28, 2024 06:52 AM
திருத்தணி : திருவள்ளூர் மாவட்டம்,திருத்தணி நகரம் சுப்பராயன் மேஸ்திரி தெருவில் வசிப்பவர் பூபதி, 54. இவர் லேத் பட்டறையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டுக்காரர் கார்த்திகேயன், 45. நேற்று முன்தினம் இரவு, கார்த்திகேயன் தன் வீட்டில் இருந்து வெளியேறும் தண்ணீர் வடிகால்வாய் வழியாக செல்வதற்கு, கார்த்திகேயன் வீட்டில் வடிகால் சரியாக இல்லாதது காரணம் என, தகராறு செய்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பூபதி வீட்டில் இருந்த, ஆக் ஷாபிளேடால் கார்த்தி கேயனின் கழுத்து, வயிறு ஆகிய இடங்களில்அறுத்தார். இதில் படுகாயமடைந்த கார்த்திகேயனை, அங்கிருந்தவர்கள் மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்று காலை சிகிச்சை பலனின்றி கார்த்திகேயன் இறந்தார்.திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து பூபதியை கைது செய்தனர்.