| ADDED : ஜூன் 24, 2024 05:58 AM
தாம்பரம்: தாம்பரம் அருகே முடிச்சூர், அமுதம் நகரைச் சேர்ந்தவர் தாமோதரன், 29; தனியார் கட்டுமான நிறுவனத்தில், பொறியாளராக பணியாற்றி வந்தார்.நேற்று முன்தினம் இரவு, தன் பல்சர் 'பைக்'கில் தாம்பரம் - முடிச்சூர் சாலையில், வீட்டை நோக்கிச் சென்றார். முடிச்சூர் பகுதியை கடந்த போது, ஒரே பைக்கில் வேகமாக எதிரே வந்த மூவர், முட்டுவதுபோல் பயமுறுத்தி உள்ளனர். இதை தாமோதரன் தட்டிக் கேட்டபோது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.மதுபோதையில் இருந்த மூவரும், தாமோதரனை கத்தியால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இது குறித்த தகவலின்படி, பீர்க்கன்காரணை போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, மர்ம நபர்கள் மூவரை தேடி வருகின்றனர்.