உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வண்டலுாரில் 1,000 பேருக்கு புதிதாக குடும்ப அட்டை

வண்டலுாரில் 1,000 பேருக்கு புதிதாக குடும்ப அட்டை

கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, ஊரப்பாக்கம், பெருமாட்டுநல்லுார், மண்ணிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகள் வண்டலுார் தாலுகா அலுவலக கட்டுப்பாட்டில் உள்ளன.அப்பகுதிவாசிகள் 2,000த்துக்கும் மேற்பட்டோர் குடும்ப அட்டை விண்ணப்பம் செய்திருந்தனர். அவற்றின் உண்மைத் தன்மை பரிசோதனை செய்யப்பட்டு, முதல் கட்டமாக 1,000 பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட உள்ளன.இதுகுறித்து, வண்டலுார் தாசில்தார் புஷ்பலதா கூறியதாவது:தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, புதிதாக குடும்ப அட்டைகள் கேட்டு விண்ணப்பங்கள் வந்துள்ளன.அவற்றை ஆய்வு செய்து, முதற் கட்டமாக1,000 பேருக்கு, புதிய குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.இன்னும் ஒரு வாரத்திற்குள், தேர்ந்தெடுக்கப்பட்ட 1,000 பேருக்கு புதிய குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.புதிய குடும்ப அட்டைகளை, அவர்கள் பகுதியை சேர்ந்த கிராம உதவியாளர்கள், நேரில் சென்று பயனாளிகளுக்கு வழங்குவர்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ