உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / புதிய நீர்த்தேக்க தொட்டி விழுதமங்கலத்தில் அமைப்பு

புதிய நீர்த்தேக்க தொட்டி விழுதமங்கலத்தில் அமைப்பு

பவுஞ்சூர் : பவுஞ்சூர் அருகே உள்ள விழுதமங்கலம் ஊராட்சியில், 1,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகர் கோவில் அருகே, 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டி இருந்தது.பராமரிப்பு இல்லாமல், சிதிலமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், அதை அகற்றிவிட்டு புதிய மேல்நிலைத் நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க வேண்டும் என, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.அதன் விளைவாக, பழைய குடிநீர் தொட்டிக்கு அருகே, 27.25 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது.கட்டுமானப் பணிகள் முடிந்துள்ள நிலையில், குழாய் இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டு, விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, ஊராட்சி ஒன்றிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை