உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வட மாநில தொழிலாளியிடம் வழிப்பறி செய்த போலீஸ் கைது

வட மாநில தொழிலாளியிடம் வழிப்பறி செய்த போலீஸ் கைது

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த குன்னப்பட்டு கிராமத்தில், ஜப்பான் சிட்டி தொழிற்பேட்டை உள்ளது. இங்கு, பல்வேறு வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர்.நேற்று முன்தினம் இரவு, மேற்கண்ட தொழிற்பேட்டையில், மானாமதி போலீஸ் அஜித்குமார், 33, என்பவர் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, வட மாநில தொழிலாளர்கள் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தனர். அஜித்குமார், ஒருவரிடம் 1,000 ரூபாயை பறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.இதுகுறித்து, அந்த தொழிலாளிகள் அவர்களின் மேலாளரிடம் தெரிவித்துள்ளனர். நிறுவனம் சார்பில், மானாமதி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.விசாரணையில், வட மாநில தொழிலாளர்களிடம், அஜித்குமார் பணம் பறித்துச் சென்றது உறுதியானது. மானாமதி போலீசார் வழக்கு பதிவு செய்து, அஜித்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை