உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மின்சார ரயிலில் ஓசி பயணம்: விதிமீறுவோர் மீது நடவடிக்கை

மின்சார ரயிலில் ஓசி பயணம்: விதிமீறுவோர் மீது நடவடிக்கை

சென்னை : சென்னையில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர், திருவள்ளூர், அரக்கோணம் தடத்தில் தினமும் 500க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சர்வீஸ் இயக்கப்படுகின்றன. அதேபோல, மாவட்டங்களுக்கு இடையே 100க்கும் மேற்பட்ட குறுகிய துார பயணியர் ரயில்களும் இயக்கப்படுகின்றன. ஓரளவுக்கு கூட்ட நெரிசல் இன்றி பயணம் செய்ய, பயணியர் கூடுதல் பணம் கொடுத்து முதல் வகுப்பு பெட்டி 'பாஸ்' எடுத்து பயணம் செய்து வருகின்றனர்.ஆனால், சிலர் இந்த பெட்டிகளில் உரிய டிக்கெட் அல்லது 'பாஸ்' இல்லாமல் பயணித்து வருகின்றனர். குறிப்பாக, ரயில்வே கடைநிலை ஊழியர்கள், போலீசார் விதிமீறி பயணிப்பதால், மற்ற பயணியர் அவதிக்குள்ளாகின்றனர்.இது குறித்து, ரயில் பயணியர் கூறியதாவது:புறநகர் மின்சார ரயிலில் கூட்ட நெரிசல் இன்றி பயணிக்க, மாதந்தோறும் கிலோ மீட்டர் துாரத்துக்கு ஏற்றார் போல், முதல் வகுப்பு பாஸ் 1,200 ரூபாய் முதல் 2,300 ரூபாய் வரையில் பணம் கொடுத்து வாங்கி பயணிக்கிறோம்.ஒரு ரயிலில் மொத்தமாகவே 100 இருக்கைகள் மட்டுமே இதற்கு ஒதுக்கப்படுகிறது. ஆனால், உரிய பாஸ் இல்லாமல், ரயில்வே கடை நிலை பணியாளர்கள், போலீசாரும் அதிகளவில் வந்து அமர்ந்து பயணிக்கின்றனர். டிக்கெட் பரிசோதகர்களும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்ட போது, 'சென்னை புறநகர் மின்சார ரயில்களில் முதல் வகுப்பு பெட்டிகளில், உரிய டிக்கெட் இல்லாமல் ரயில்வே ஊழியர்கள், போலீசார் பயணம் செய்யக் கூடாது. விதிமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தத்வமசி
மே 07, 2024 14:52

சென்னை பீச் - தாம்பரம் இடையே பல முறை பரிசோதகர் வருகிறார் அதனால் மக்கள் ஏறுவதில்லை ஆனால் தாம்பரம் - செங்கல்பட்டு மார்க்கத்தில் எப்போதாவது அத்தி பூத்தாற்போல டிக்கட் பரிசோதகர் வருகிறார் அதனால் யாருக்கும் இதில் ஏறுவதற்கு பயமில்லை குடும்பத்துடன் வருபவர்கள் சுற்றிப் பார்த்து முதல் வகுப்பு என்று புரிந்து கொண்டு இறங்கி சென்று விடுகின்றனர் ஆனால் தனியாக வரும் ஆடவர்கள், மாணவர்கள் அரிதாக வரும் பரிசோதகர்களிடம் வசமாக மாட்டிக் கொள்கின்றனர் இதை விட மேல்மருவத்தூர் - எக்மோர் செல்லும் மெமோ ரெயிலில் முதல் வகுப்பு டிக்கட் வாங்கியர்கள் நின்று கொண்டு தான் செல்ல வேண்டும் அங்கு குடும்பத்துடன் ஏறி அமர்ந்து கொண்டு இடம் தராமல் பலர் அடாவடி செய்கின்றனர் குழந்தையை தூங்க வைத்து விட்டு, அல்லது அவர்களே படுத்துக் கொண்டு எழுந்து கொள்ள முடியாது என்று சண்டை போடுகின்றனர் மெமோ ரெயிலில் செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி - சென்கல்பப்ட்டுக்கு இடையே கட்டாயம் டிக்கட் பரிசோதகர் வர வேண்டும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை