உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பாம்பு கடித்து மூதாட்டி பலி

பாம்பு கடித்து மூதாட்டி பலி

சித்தாமூர் : சித்தாமூர் அருகே அகத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனகோடி, 80.நேற்று, வீட்டின் வெளியே அமர்ந்திருந்த போது, எதிர்பாராத விதமாக விஷப்பாம்பு தனகோடியின் வலது கையில் கடித்தது. உறவினர்கள், உடனே தனகோடியை மீட்டு, மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, தனகோடியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இதையடுத்து, சித்தாமூர் போலீசார், மூதாட்டியின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ