| ADDED : மே 11, 2024 12:56 AM
மறைமலை நகர்:செங்கல்பட்டு புறநகரை ஒட்டி உள்ள கிராமங்களான கொண்டமங்கலம், கருநிலம், சிறுகுன்றம், பெருந்தண்டலம் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில், நேற்று மதியம் 30 நிமிடங்கள் கோடை மழை பெய்தது.கடந்த இரண்டு மாதங்களாக, கோடை வெயில் வாட்டி வதைத்த நிலையில், திடீர் மழை காரண மாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இருப்பினும், மழையின் காரணமாக, கருநிலம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கருநிலம், கொண்டமங்கலம், கடம்பூர், கரும்பூர், மருதேரி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் நெல் மூட்டைகள் கொண்டு வந்து வைத்துள்ளனர்.கொள்முதலுக்காக வைக்கப்பட்டிருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மற்றும் நெல் குவியல்கள் மழையில் நனைந்தன. இதையடுத்து, நனைந்த நெல் குவியல்களை உலர்த்தும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டனர்.