உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பழையனுார் மாகாளீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்

பழையனுார் மாகாளீஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேகம் கோலாகலம்

மதுராந்தகம் : மதுராந்தகம் அடுத்த பழையனுார் கிராமத்தில், மரகதவல்லி தாயார் உடனுறை மாகாளீஸ்வரர் கோவிலில், நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது.முதலாம் ராசராசன், மூன்றாம் ராசராசன், முதலாம் குலோத்துங்கன் போன்ற மன்னர்களால் கோவிலுக்கு நன்கொடைகள் அளிக்கப்பட்ட செய்திகள் குறித்து, கோவிலில் உள்ள 11 கல்வெட்டுகள் வாயிலாக அறிய முடிகிறது.மிகப் பழமையான இக்கோவிலில், கடந்த 5ம் தேதி தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை, மஹா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது.இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜைகள் நடைபெற்று முடிந்தன. நேற்று, நான்காம் கால யாகசாலை பூஜையில், பூர்ணாஹுதி தீபாராதனை, சதுர்வேத பாராயணம் உள்ளிட்ட பூஜைகளுடன் மஹா தீபாராதனை நடந்தது.தொடர்ந்து, யாகசாலையில் இருந்து கலச புறப்பாடு நடந்தது. பின், சிவ வாத்தியங்கள் ஒலிக்க, விமான கோபுர கலசத்திற்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் விழா நடந்தது.இதில், சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. இரவு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மரகதவல்லி உடனுறை மாகாளீஸ்வரர், வீதி உலா வந்தார்.விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை