சாலை நடுவே மின்கம்பம் விபத்து அபாயத்தால் பீதி
மேடவாக்கம்:மேடவாக்கம் 3வது வார்டுக்கு உட்பட்ட சாய்ராம் நகர், முதல் குறுக்குத் தெருவில் 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இங்குள்ள ஒரு மின்கம்பம் சாலை நடுவே இருப்பதால், அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.பொதுமக்கள் கூறியதாவது:இரு ஆண்டுகளுக்கு முன், சாலை ஓரம் புதிய மின்கம்பம் நடப்பட்டது. ஆனால், மின் கம்பிகளை புதிய கம்பத்தில் இணைத்து, பழையதை அகற்ற 40,000 ரூபாய் வசூலித்து தரும்படி, மின்வாரிய அதிகாரிகள் வற்புறுத்தினர்.பணம் தராததால், சாலை ஓரம் நடப்பட்ட மின்கம்பத்தில் இதுவரை இணைப்பு கொடுக்கப்படவில்லை.ஆம்புலன்ஸ், பள்ளி வாகனங்கள் இவ்வழியாக வந்து செல்ல, சாலை நடுவே தடையாக உள்ளது. அதை அகற்றி, புதிய கம்பத்தில் இருந்து மின் இணைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.