உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லை நரிக்குறவர் பகுதிக்கு பேவர் பிளாக் சாலை அமைப்பு

மாமல்லை நரிக்குறவர் பகுதிக்கு பேவர் பிளாக் சாலை அமைப்பு

மாமல்லபுரம்:மாமல்லபுரம், பூஞ்சேரி பகுதியில், நரிக்குறவர்கள், இருளர்கள், பிற மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதிக்கு, பூஞ்சேரி பாரதி தெரு வழியே தான், சுற்றிச்செல்ல வேண்டும்.ஆனால், சிரமம் கருதி, அரசு மருத்துவமனை சாலை, மேய்க்கால் புறம்போக்கு மைதானம் வழியே, குறுகிய தடத்தில் அப்பகுதியினர் சென்று வந்தனர். அரசு மருத்துவமனை வளாகம் வரை, கான்கிரீட் சாலை உள்ளது. மேய்க்கால் புறம்போக்கு மைதான பகுதியில் சாலை இல்லாததால், கரடு முரடான மணற்பகுதியாக உள்ளது.மழையின் போது, பள்ளங் களில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியாகவும் மாறிவிடும். அரசு மருத்துவமனை பகுதியிலிருந்து, நரிக்குறவர் வசிப்பிட பகுதி வரை சாலை அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தினர். இதையடுத்து, பேரூராட்சி நிர்வாகம், தற்போது சிறிய பாலங்களுடன், பேவர் பிளாக் சாலை அமைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி