உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மக்கள் குறைதீர் கூட்டம் 356 மனுக்கள் ஏற்பு

மக்கள் குறைதீர் கூட்டம் 356 மனுக்கள் ஏற்பு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மக்கள் குறை தீர்க்கும் கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் சுபாநந்தினி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாகேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.இந்த முகாமில், ஆதிதிராவிடர் நத்தம் வகைப்பாடு நிலத்திற்கு பட்டா மாற்றம், வேலை வாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, கல்விக்கடன், புதிய ரேஷன் கார்டு, பேருந்து வசதி, சுய தொழில் துவங்க கடன் உதவி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 356 மனுக்கள் வரப்பெற்றன.இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.அதன்பின், நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரிய உறுப்பினர்கள் 15 பேருக்கு, மூக்கு கண்ணாடிகள், திருமண நிதி, கல்வி உதவித்தொகை மற்றும் ஈமச்சடங்கு, இயற்கை மரண நிதி என, 47,000 ரூபாய் மதிப்பீட்டில், அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ