உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குடிநீர் வழங்கக்கோரி திம்மாவரம் மக்கள் மனு

குடிநீர் வழங்கக்கோரி திம்மாவரம் மக்கள் மனு

திம்மாவரம் : செங்கல்பட்டு அடுத்த, திம்மாவரம் ஊராட்சி உள்ளன. இங்கு, திம்மாவரம், அண்ணாநகர், பாலுநகர், வசந்தம் நகர், வி.ஜி.என்., நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், 10,000த்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.பாலாற்றங்கரை அருகில், ஊராட்சி அமைந்துள்ளது. இந்த ஊராட்சியில், பல ஆண்டுகளுக்கு முன், பாலாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.தற்போது, மக்கள் தொகை அதிகரித்துள்ளதற்கேற்ப, குடிநீர் வழங்க முடியாத சூழல் உள்ளது. கோடை காலம் என்பதால், குடிநீர் தட்டுபாடு அதிகரித்து வருகிறது.கோடை காலத்தில் கூடுதல் குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும் என, ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், நகராட்சி நிர்வாகம் கிடப்பில் போட்டுள்ளது.எனவே, கோடை காலத்தில் கூடுதல் குடிநீர் வழங்க, காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி, ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி