| ADDED : மே 04, 2024 10:35 PM
கூடுவாஞ்சேரி:காட்டாங்குளத்துார் ஒன்றியம், வண்டலுாரில் இருந்து கேளம்பாக்கம் செல்லும் பிரதான சாலையில் மாம்பாக்கம் உள்ளது. இங்குள்ள அரசு பள்ளி அருகே, மிகவும் பழமையான மின்மாற்றி உள்ளது.இந்த மின்மாற்றியில் இருந்து சுற்றுவட்டார பகுதிகளுக்கு மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மாம்பாக்கம் பிரதான சாலையில், பெட்ரோல் பங்க் உட்பட கடைகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வீடுகள் உள்ளன.இவர்களுக்கு, இந்த மின்மாற்றியின் வாயிலாக மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. பல மாதங்களாக, இந்த மின்மாற்றி பழுது காரணமாக குறைந்தழுத்த மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் அலுவலக பணிகளை மேற்கொள்ள இயலாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து அப்பகுதி வாசிகள் மாம்பாக்கம் உதவி செயற்பொறியாளரிடம் பலமுறை புகார் மனு அளித்தும், இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து பழுதடைந்த மின் மாற்றியை சீரமைத்து, சீரான மின் வினியோகம் கிடைக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.