உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் பழுது நீக்கம்

செங்கை ரயில் நிலையத்தில் எஸ்கலேட்டர் பழுது நீக்கம்

மறைமலைநகர்:செங்கல்பட்டு ரயில் நிலையத்தில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் விரைவு ரயில்கள், புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்கின்றன.இந்த ரயில் நிலையம் வாயிலாக, சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்டகிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.அதேபோல சிங்கபெருமாள் கோவில், மறைமலைநகர், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, மின்சார ரயில் வாயிலாக செங்கல்பட்டிற்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்கின்றனர்.இந்த ரயில் நிலையத்தில்எட்டு நடைமேடைகள்உள்ளன. இதில் இரண்டாவது நடைமேடையில், 2022ம் ஆண்டு பயணியரின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, புதிதாக 'எஸ்கலேட்டர்' அமைக்கப்பட்டது.இவற்றில் ஏறி, இறங்கி முதியோர், கர்ப்பிணியர்,மாற்றுத்திறனாளிகள் சென்று வந்தனர். சில மாதங்களாக இந்தஎஸ்கலேட்டர் பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து செயல்படாமல்இருந்தது.இதனால், பயணியர் படிக்கட்டுகளை பயன்படுத்தி அவதியடைந்துவந்தனர்.இதுகுறித்து நம் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக, செங்கல்பட்டு நிலைய ரயில்வே அதிகாரிகள், பழுதடைந்த எஸ்கலேட்டரை சரிசெய்து, பயணியரின் பயன்பாட்டிற்குமீண்டும் கொண்டுவந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி