உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வாகனம் மோதி சேதமடைந்த பள்ளி சுற்றுச்சுவர் சீரமைப்பு

வாகனம் மோதி சேதமடைந்த பள்ளி சுற்றுச்சுவர் சீரமைப்பு

அச்சிறுபாக்கம் : அச்சிறுபாக்கம் அடுத்த எலப்பாக்கத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு, 30க்கு மேற்பட்ட மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.இந்த பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடம் அமைக்க, ஆறு மாதங்களுக்கு முன், கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்லும் போது, வாகனம் மோதி பள்ளியின் நுழைவாயில் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் சேதமடைந்தது.இதனால், பள்ளியின் நுழைவாயில் கேட் மூடுவதற்கு பெரும் சிரமமாக இருந்தது.சுற்றுச்சுவர் வலிமை இழந்து விழும் அபாய நிலை இருந்தது. மேலும், பள்ளி வளாகத்திற்குள் கால்நடைகள் மற்றும் நாய்கள் சுற்றித் திரிந்தன.இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சேதமடைந்த சுற்றுச்சுவரை இடித்து அகற்றிவிட்டு, மீண்டும் புதிதாக சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ