உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அல்லுார் சாலை சேதம் சீரமைக்க வேண்டுகோள்

அல்லுார் சாலை சேதம் சீரமைக்க வேண்டுகோள்

அச்சிறுபாக்கம்:அச்சிறுபாக்கம் ஒன்றியம், முருங்கை ஊராட்சிக்குட்பட்ட அல்லுார் கிராமத்தில், மாரியம்மன் கோவில் தெரு, பெருமாள் கோவில் தெரு பகுதியில், 10 ஆண்டுகளுக்கு முன் தார் சாலை அமைக்கப்பட்டது.தற்போது, தார் சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.இது குறித்து, அப்பகுதி குடியிருப்புவாசிசரவணன், 45, கூறியதாவது:அல்லுார் கிராமத்தில், பெருமாள் கோவில் தெரு, மாரியம்மன் கோவில் தெருவில் அமைக்கப்பட்ட தார் சாலை, முற்றிலும் சேதம் அடைந்துள்ளது.ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளதால், முதியவர்கள் நடந்து செல்ல முடியவில்லை. இருசக்கர வாகனங்களில் செல்வோர், அவ்வப்போது கீழே விழுந்து அடிபடு கின்றனர்.திருவிழா மற்றும் பண்டிகை காலங்களில், சுவாமி ஊர்வலம் மற்றும்பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மிகவும் சிரமமாக உள்ளது.இதுகுறித்து துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும்,இதுவரை எவ்விதநடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே, துறை சார்ந்த ஊராட்சி, ஒன்றிய அதிகாரிகள், இப்பகுதியை ஆய்வு செய்து, புதிதாக தார் சாலை அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்