உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பேருந்து நிழற்குடை பராமரிக்க கோரிக்கை

பேருந்து நிழற்குடை பராமரிக்க கோரிக்கை

மறைமலை நகர் : சிங்கபெருமாள் கோவில் -- அனுமந்தபுரம் தடத்தில் அனுமந்தபுரம், சந்தகுப்பம், தர்காஸ் உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.இந்த நிழற்குடைகள் போஸ்டர்கள் மற்றும் குப்பை நிறைந்து பாழடைந்து காணப்படுகின்றன. மேலும், இரவு நேரங்களில் மதுக்கூடமாக மாறிவிடுகிறது. இதனால், காலி பாட்டில்கள் ஆங்காங்கே கிடக்கின்றன.இதன் காரணமாக, மழை மற்றும் வெயில் காலங்களில் பயணியர் ஒதுங்க இடம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ