உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / நென்மேலியில் சாலையை சீரமைக்க கோரிக்கை

நென்மேலியில் சாலையை சீரமைக்க கோரிக்கை

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த நென்மேலி ஊராட்சியில், மெட்ரோ சமீரா கார்டன்ஸ், வெங்கடேஷ்வரா நகர் உள்ளிட்ட பல்வேறு நகர்கள் உள்ளன.இங்கு, தற்போது குடியிருப்புகள் அதிகரித்து வருகிறது. இப்பகுதியில், கோகுலம் பொதுப் பள்ளியில் 2,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். செங்கல்பட்டு -- திருக்கழுக்குன்றம் நெடுஞ்சாலையில் இருந்து, மெட்ரோ சமீரா கார்டன்ஸ் நகரில், ஐந்து ஆண்டுகளுக்கு முன் புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது.தற்போது, சாலை சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும், சாலையில் ஆங்காங்கே மரண பள்ளங்கள் உள்ளன. இதனால், வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனேயே பயணித்து வருகின்றனர்.இது தொடர்பாக, ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம், அப்பகுதியினர் தொடர்ந்து மனு அளித்தனர். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, சாலையை சீரமைக்க கோரி, முதல்வர் தனிப்பிரிவு மற்றும் கலெக்டருக்கு, அப்பகுதியினர் மனு அளித்துள்ளனர்.எனவே, அப்பகுதி வாசிகளின் நலன் கருதி, சேதமடைந்த சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை