உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திடீர் சாலை மையத்தடுப்பால் செம்பாக்கத்தில் விபத்து அபாயம்

திடீர் சாலை மையத்தடுப்பால் செம்பாக்கத்தில் விபத்து அபாயம்

திருப்போரூர்:திருப்போரூர் - செங்கல்பட்டு சாலை, செம்பாக்கம் பகுதியில் எச்சரிப்பு பலகை இல்லாத மையத்தடுப்பால், விபத்து ஏற்படும் சூழல் உள்ளது.திருப்போரூர் - செங்கல்பட்டு சாலை, 27 கி.மீ., உள்ளது. இரு வழிப்பாதையாக இருந்த இச்சாலை, 117 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.சாலையின் நடுவே மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. அவ்வாறு, செம்பாக்கம் மின் வாரிய அலுவலகம் அருகே அமைக்கப்பட்டுள்ள மையத்தடுப்பில், வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் வகையில், விபத்து தடுப்பு எதுவும் இல்லை.இதனால், வேகமாக வரும் வாகன ஓட்டிகள், சாலையில் திடீர் மையத்தடுப்பு இருப்பதை அறியாமல், அதில் மோதி விபத்தில் சிக்குகின்றனர். எனவே, நெடுஞ்சாலைத் துறையினர், அங்கு எச்சரிக்கை அறிவிப்பு பலகை மற்றும் ரிப்ளக்டர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை