வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் மோசடி
தாம்பரம்:குன்றத்துாரை சேர்ந்தவர் ஹரிஹரன், 44. இவர், 2023ல், வெளிநாட்டிற்கு ஆட்களை வேலைக்கு அனுப்பும் அலுவலகத்தை நடத்தினார்.அப்போது, வெளிநாட்டு கப்பலில் வேலை வாங்கி தருவதாக கூறி, ஐந்து லட்சம் ரூபாய் வரை வசூல் செய்து பலரிடம், 25 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி உள்ளார்.பாதிக்கப்பட்ட நபர்கள், தாம்பரம் காவல் நிலையத்தில், கடந்த டிசம்பரில் புகார் அளித்தனர். தலைமறைவாக இருந்த ஹரிஹரனை, தாம்பரம் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து, சிறையில் அடைத்தனர். வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.