உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வெளிச்சம் இருந்தால் குற்றங்கள் குறையும் அதிகாரிகளுக்கு செங்கை கலெக்டர் அறிவுரை

வெளிச்சம் இருந்தால் குற்றங்கள் குறையும் அதிகாரிகளுக்கு செங்கை கலெக்டர் அறிவுரை

சென்னை : பெரும்பாக்கம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், 26,000த்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு, பள்ளி செல்லா குழந்தைகள், போதை பழக்கம், கஞ்சா வியாபாரம், குழந்தை திருமணம், சிறுமியர், பெண்கள் மீது பாலியல் தொந்தரவு அதிகரித்து வருவதாக, தனியார் அறக்கட்டளை கருத்து தெரிவித்தது. இது குறித்து, பத்திரிகை, 'டிவி' மற்றும் சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், பெரும்பாக்கம் குடியிருப்பில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார்.வாரியம் நடத்திய விளையாட்டு போட்டியை துவக்கி வைத்து, அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையம் சென்றார்; அங்கு டாக்டர் இல்லை. பெரும்பாலான நாட்களில் டாக்டர்கள் இருப்பதில்லை என, நோயாளிகள் கூறினர். மேலும், பல இடங்களில் தெரு விளக்குகள் எரியாததும் தெரிந்தது.இதையடுத்து அதிகாரிகளை அழைத்த அவர், '‛குற்றங்கள் அதிகரிக்க இருட்டு ஒரு காரணம். வெளிச்சம் இருந்தால் குற்றங்கள் குறையும். ஒரு வாரத்தில், இங்குள்ள சாலைகளில் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்,'' என, உத்தரவிட்டார்.சோழிங்கநல்லுார் தொகுதியில் உள்ள ஏழு ஊராட்சிகளை, சென்னை மாநகராட்சியுடன் இணைக்கும் நடவடிக்கையை வேகப்படுத்த வேண்டும் என, தென்சென்னை தொகுதி எம்.பி., தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லுார் தொகுதி எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் ஆகியோர், கலெக்டரிடம் முறையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக, கலெக்டர் உறுதி அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ