மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், வருவாய் தீர்வாய 'ஜமாபந்தி'யை, ஜூன் 12ம் தேதி துவக்க முடிவெடுத்து, கலெக்டர் அருண்ராஜ், தாலுகாதோறும் ஜமாபந்தி அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளார்.தமிழக வருவாய்த் துறை, ஆண்டு பசலி வருவாய் தீர்வாய 'ஜமாபந்தி'யை, அனைத்து தாலுகாக்களிலும், ஆண்டுதோறும் நடத்துகிறது.அதற்காக நியமிக்கப்பட்ட அலுவலர்கள், கிராமத்தின் பதிவு கணக்குகளை தணிக்கை செய்வர். பொதுமக்கள், மனைப்பட்டா, பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை உள்ளிட்டவை கோரி மனுக்கள் அளிப்பர்.அதையொட்டி, 1433ம் பசலி ஆண்டு, 'ஜமாபந்தி' வருவாய் தீர்வாயம், மே மாத இறுதியில் துவக்கி இருக்க வேண்டும்.லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள், ஓட்டு எண்ணப்படும் ஜூன் 4ம் தேதி வரை அமலில் உள்ளதால், ஜமாபந்தி நடத்துவது தாமதமானது.இந்நிலையில், 'ஜமாபந்தி'யை வரும் 12ம் தேதி துவக்கி, ஜூன் 28ம் தேதி வரை நடத்த முடிவெடுத்து, தாலுகாதோறும் அதற்கான அலுவலர்களை நியமித்து, கலெக்டர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
தாலுகா அலுவலர் நாட்கள்
செங்கல்பட்டு கலெக்டர் ஜூன் 12, 13, 14, 18வண்டலுார் மாவட்ட வருவாய் அலுவலர் ஜூன் 12, 13, 14திருப்போரூர் சப் - கலெக்டர் ஜூன் 12, 13, 14, 18, 19, 20செய்யூர் ஆர்.டி.ஓ., மதுராந்தகம் ஜூன் 12, 13, 14, 18, 19, 20, 21, 25, 26, 27திருக்கழுக்குன்றம் உதவி ஆணையர் - கலால், செங்கை ஜூன் 12, 13, 14, 18, 19, 20, 21, 25மதுராந்தகம் கலெக்டர் நேர்முக உதவியாளர் - நிலம் ஜூன் 12, 13, 14, 18, 19, 20, 21, 25, 26, 27, 28தாம்பரம் தனி உதவி கலெக்டர் - ச.பா.திட்டம் ஜூன் 12, 13, 14பல்லாவரம் ஆர்.டி.ஓ., தாம்பரம் ஜூன் 12, 13