உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செட்டிபுண்ணியம் சாலை படுமோசம் தினமும் 8 போடும் வாகன ஓட்டிகள்

செட்டிபுண்ணியம் சாலை படுமோசம் தினமும் 8 போடும் வாகன ஓட்டிகள்

மறைமலைநகர் : காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், செட்டிபுண்ணியம் கிராமத்தில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இவர்கள், மகேந்திரா சிட்டி - செட்டிபுண்ணியம் சாலை வழியாக செங்கல்பட்டு, தாம்பரம், சிங்கபெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு தினமும் சென்று வருகின்றனர்.இந்த சாலையில் பல இடங்களில் பள்ளம் ஏற்பட்டு குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் ஜல்லி கற்கள் பெயர்ந்து உள்ளன. இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், தொடர் மழையின் காரணமாக சாலை பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.இந்த சாலையில் அதிகளவில் கல் அரவை ஆலைகளுக்கு செல்லும் லாரிகளால், சாலை மேலும் சேதமடைவதாக அப்பகுதி வாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். இவ்வழியாக பள்ளி வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் சென்று வருகின்றன.எனவே, சேதமடைந்த இச்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து செட்டிபுண்ணியம் ஊராட்சி பிரதிநிதிகள் கூறியதாவது:இந்த சாலை நெடுஞ்சாலை கட்டுப்பாட்டில் உள்ளது. சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளை ஒட்டி, வனத்துறைக்கு சொந்தமான காடுகள் உள்ளதால், வனத்துறை அதிகாரிகள் அனுமதியளிக்க மறுக்கின்றனர். சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளும் போதும் தடையாக உள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை