உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி

சாலையில் வழிந்தோடும் கழிவுநீர் வாகன ஓட்டிகள் அவதி

மறைமலை நகர், மறைமலை நகர் நகராட்சி எம்.ஜி.ஆர்., சாலையில் சாலையில் தனியார் உணவகம் அருகில் சாலை ஓரம் உள்ள பாதாள சாக்கடை மூடி மேல் தளத்தில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்து ஓடுகிறது. இதன் காரணமாக, இந்த பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:இந்த சாலை வழியாக மறைமலை நகர் சிப்காட் பகுதிக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமானோர் அதிகளவில் சென்று வருகின்றனர்.கழிவுநீர் வழிந்து ஓடுவதால் பாதசாரிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே கழிவுநீர் வெளியேறுவதை தடுக்க நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !