உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எஸ்.ஐ., மகனுக்கு வெட்டு இருவருக்கு காப்பு

எஸ்.ஐ., மகனுக்கு வெட்டு இருவருக்கு காப்பு

சேலையூர்:சேலையூரை அடுத்த கஸ்பாபுரம், கணேஷ் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 53. சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில், மத்திய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.இவரது மகன் ஸ்ரீபவுல், 21, நேற்று முன்தினம் இரவு, பதுவஞ்சேரி - மாடம்பாக்கம் சாலை வழியாக, ஸ்ரீ பவுல் நடந்து சென்றார். அப்போது, அங்குள்ள காலி மைதானத்தில் மது அருந்திய டில்லி கணேஷ் என்பவர், தன் நண்பர் சஞ்சய் அழைத்து வரும்படி கூறியதாக, ஸ்ரீபவுலை வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.அங்கிருந்த ஆறு பேர் கும்பல், மறைத்து வைத்திருந்த கத்தியால் ஸ்ரீ பவுலை வெட்டியுள்ளனர்.இதில் இரு கைகளிலும் பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தோர் மீட்டு, அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து, பதுவஞ்சேரியைச் சேர்ந்த சூர்யா, 19, சையத், 21, ஆகிய இருவரை கைது செய்தனர். நான்கு பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை