உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / விபத்தில் இருந்து விலங்குகளை காக்க வேகத்தடை, எச்சரிக்கை பலகை தேவை

விபத்தில் இருந்து விலங்குகளை காக்க வேகத்தடை, எச்சரிக்கை பலகை தேவை

திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம் அடுத்த காட்டூர், முடையூர், பொன்பதிர்கூடம், சாலுார், ஒரகடம் மற்றும் திருப்போரூர் சுற்றுப்புற பகுதிகளில் வனப்பகுதிகள் உள்ளன.இங்கு மான், மயில் உள்ளிட்டவை ஏராளமாக உள்ளன. இரை தேடியும், குடிநீருக்காகவும், வனப்பகுதியில் இருந்து, அடிக்கடி வெளியில் வருகின்றன.திருக்கழுக்குன்றத்தில் இருந்து மதுராந்தகம், பொன்விளைந்தகளத்துார், திருப்போரூர், ஒரகடம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சாலைகளில், குறிப்பிட்ட இடங்களில், வனப்பகுதி உள்ள நிலையில், மான் உள்ளிட்ட விலங்குகள், சாலையின் குறுக்கில் கடக்க முயன்று, வாகனம் மோதி உயிரிழக்கின்றன.திருக்கழுக்குன்றம் அடுத்த முடையூர் பகுதியில், நேற்று முன்தினம் மாலை லாரி மோதி மான் காயம் அடைந்தது. வனவிலங்குகள் கடக்கும் பகுதி என்பதை அறிந்தும், வாகனங்களை வேகமாகவே ஓட்டுகின்றனர்.எனவே, விலங்குகள் விபத்தில் சிக்குவதை தவிர்க்க, வனத்தில் குறுக்கிடும் சாலைகளில் வேகத்தடை, எச்சரிக்கை பலகை அமைக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ