உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஸ்ரீபெரும்புதுார் வேட்பாளர் வேணுகோபால் ஜெயின், சவுத்ரி சமூகத்தினருடன் சந்திப்பு

ஸ்ரீபெரும்புதுார் வேட்பாளர் வேணுகோபால் ஜெயின், சவுத்ரி சமூகத்தினருடன் சந்திப்பு

தாம்பரம்,ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதி த.மா.கா.,வேட்பாளர் வேணு கோபால், ஜெயின், சவுத்ரி, ரெட்டியார் சமூகத்தினரை சந்தித்து, தனக்கு ஆதரவு கோரினார். இந்த சமூகத் தினர் தனக்கு ஆதரவுதெரிவித்துள்ளதாக, வேட்பாளர் கூறினார்.தேசிய ஜனநாயககூட்டணி, த.மா.கா., வேட்பாளர் வேணுகோபால், ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர், தொகுதி முழுதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.தெலுங்கு புத்தாண்டை முன்னிட்டு, தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் உள்ள ரெட்டியார், நாயுடு சமூகத்தினரை, நேற்று நேரில் சந்தித்து, உகாதி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.அப்போது, லோக்சபாதேர்தலில், சைக்கிள்சின்னத்தில் போட்டி யிடும் தனக்கு ஆதரவு வழங்கும்படி வேண்டுகோள்விடுத்தார். அதேபோல், தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில், ஜெயின், சவுத்ரி சமூகத்தினரை, த.மா.கா.,வேட்பாளர் வேணு கோபால், சந்தித்து ஆதரவு கோரினார்.அப்போது, வேணு கோபால் கூறியதாவது:மோடியின் நல்லாட்சி, மூன்றாவது முறையாக தொடர வேண்டும்என்பதே, எங்களின் விருப்பம் என, ஜெயின், சவுத்ரி சமூகத்தினர் கூறினர்.மேலும், வலிமையான பாரத நாட்டை உருவாக்க, ஆறு சட்டசபை தொகுதி களில் இந்த சமூகத்தினர், பிரதமர் மோடிக்கு, துணை நிற்பதாகவும் உறுதி அளித்தனர். தொடர்ந்து, தெலுங்கு ஆண்டு பிறப்பை முன்னிட்டு, தாம்பரம், பல்லாவரம் பகுதிகளில் தெலுங்கு பேசும் நாயுடு மற்றும்ரெட்டியார் சமூக மக்களையும் சந்தித்து, உகாதி வாழ்த்துகளை தெரிவித்து, ஆதரவு கோரினோம். அவர்களும், எனக்கு, ஆதரவு தருவதாகஉறுதியளித்துள்ளனர்.இந்த சந்திப்பின் போது, இந்த சமூகத்தினர் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். நான் வெற்றி பெற்றால்,இந்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலனை செய்யப்பட்டு, படிப்படியாக நிறைவேற்ற பாடு படுவேன்.தாம்பரம், பல்லாவரம் சட்டசபை தொகுதி வாலிபர்கள், விளையாட்டு வீரர்களின் வசதிக்காக, விளையாட்டு மைதானம் அமைக்கவும், தொகுதியில் இருந்து அதிகப்படியான விளையாட்டு வீரர்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுப்பேன்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை