உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தமிழ் பேராயம் விருதுக்கு விண்ணப்பிக்க எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனம் அழைப்பு

தமிழ் பேராயம் விருதுக்கு விண்ணப்பிக்க எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனம் அழைப்பு

மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த காட்டாங்கொளத்துாரில் உள்ள எஸ்.ஆர்.எம்., கல்வி நிறுவனத்தில், தமிழ்ப்பேராயம் செயல்பட்டு வருகிறது.அதன் சார்பில், சிறந்த தமிழ் புத்தகங்கள், சிறந்த தமிழ் இதழ், சிறந்த தமிழ்ச்சங்கம், அறிஞர்கள் ஆகிய பிரிவுகளின் கீழ், 12 விருதுகள், 2012ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி, 2024ம் ஆண்டுக்கான விருதுகள் பெற தகுதியான நபர்களிடமிருந்து, பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.விருதுகளுக்கு உரிய புத்தகங்கள், 2021 - 23ம் ஆண்டுகளில், முதல் பதிப்பகம் வெளி வந்திருக்க வேண்டும். 2024ம் ஆண்டு வந்த புத்தகங்கள் தகுதி பெறாது. தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களை வெளியிட்ட பதிப்பகத்தாருக்கு, 20,000 வழங்கப்படும்.தமிழிசை மற்றும் நாட்டுப்புற கலைகளில் சிறந்து விளங்கும் குழுவுக்கு, அருணாசல கவிராயர் விருது வழங்கப்படும்.பாரிவேந்தர் பைந்தமிழர் விருதுக்கு பரிந்துரைக்கப்படும் தமிழறிஞர்கள், செய்த தமிழ் பணிகள், பெற்ற பட்டங்கள், எழுதிய நுால்களின் பட்டியல் உள்ளடக்கிய தகவல்களை பரிந்துரை கடிதத்துடன் அனுப்ப வேண்டும். இந்த விருதுக்கான பரிந்துரையை, உரியவரோ மற்றவர்களோ அனுப்பலாம். எந்த நாட்டை சேர்ந்த தமிழறிஞர்களும், மேற்கண்ட விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படாத புத்தகங்கள் திருப்பி அளிக்கப்படாது. தமிழ்பேராயத்தால் நியமிக்கப்பட்ட வல்லுனர் குழுவின் முடிவே இறுதியானது.பரிந்துரைகள் மற்றும் நுால்களை அனுப்ப வேண்டிய முகவரி: தலைவர், தமிழ் பேராயம், வேந்தர் கலையகம் முதல் தளம், எஸ்.ஆர்.எம்., அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், காட்டாங்கொளத்துார். தொலைபேசி எண்: 044 -2741 7375/76.மே 31ம் தேதிக்கு முன்பாக அனுப்பி வைக்க வேண்டும் என, தமிழ்ப்பேராயம் அமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

விருதுகள் விவரம்

1. புதுமைப்பித்தன் படைப்பிலக்கிய விருது - ரூ.1 லட்சம்2. பாரதியார் கவிதை விருது -- ரூ.1 லட்சம்3. அழ.வள்ளியப்பா குழந்தை இலக்கிய விருது - ரூ.1 லட்சம்4. ஜி.யு.போப் மொழிபெயர்ப்பு விருது -- ரூ.1 லட்சம்5. அப்துல்கலாம் அறிவியல் தமிழ் மற்றும் தொழில்நுட்ப ஆய்வு விருது - ரூ.1 லட்சம்6. முத்துத்தாண்டவர் தமிழிசை விருது - ரூ.1 லட்சம்7. பரிதிமாற்கலைஞர் தமிழ் ஆய்வறிஞர் விருது - ரூ.1 லட்சம்8. முத்தமிழ் அறிஞர் கலைஞர் சமூக நீதி விருது -- ரூ.1 லட்சம்9. சுதேசமித்ரன் தமிழ் இதழ் விருது - ரூ.50,00010. தொல்காப்பியர் தமிழ்ச்சங்க விருது - ரூ.50,00011. அருணாச்சலக் கவிராயர் விருது -- ரூ.50,00012. பாரிவேந்தர் பைந்தமிழர் விருது - ரூ.3 லட்சம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Shahraj M
மே 02, 2024 22:23

நூலின் எத்தனை பிரதிகள் அனுப்ப வேண்டும் என்பது பற்றிக் குறிப்பிடப்படவில்லையே அது மிக முக்கியமாயிற்றே தமிழ் பேராயம் கொடுத்த அறிவிப்பிலேயே அது இல்லையா? அல்லது உங்கள் செய்தியில் இடம்பெறத் தவறிவிட்டதா? அல்லது ஒரு பிரதி அனுப்பினால் போதும் என்பதால் அது குறித்த தகவல் இடம்பெறவில்லையா? - ஷாராஜ், பொள்ளாச்சி


Paarivendhar Manavar Tamil Mandram
மே 11, 2024 03:19

ஒன்று அல்லது மூன்று பிரதி அனுப்பினால் போதும்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை