மாநில அளவிலான செஸ் வித்யாசாகர் மாணவி தேர்வு
செங்கல்பட்டு, செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளி மாணவி, செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், மாவட்ட அளவில் வெற்றி பெற்று, மாநில அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளார்.செங்கல்பட்டு சதுரங்க கழகம் சார்பில், மாவட்ட அளவில் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, செங்கல்பட்டில் நடந்தது. இதில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.இந்தபோட்டியில், செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளி மாணவி கே.நித்யா, 25 வயதுக்கும் குறைவான பிரிவில் மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றார். இவருக்கு சுழற்கோப்பை, பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.இவர், மாநில அளவில் நடைபெறும் போட்டிக்கு தேர்வாகி உள்ளார். மாணவி நித்யாவுக்கு பள்ளி நிர்வாகம், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.