உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மகளிர் பள்ளி அருகே டாஸ்மாக் ஆதனஞ்சேரியில் கடும் எதிர்ப்பு

மகளிர் பள்ளி அருகே டாஸ்மாக் ஆதனஞ்சேரியில் கடும் எதிர்ப்பு

படப்பை:படப்பை ஊராட்சி ஆதனஞ்சேரி, ஷாம் நகரில் அரசு டாஸ்மாக் கடை மற்றும் மதுக்கூடம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கூடாது என, படப்பை பொதுமக்கள், காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.அதன் விபரம்:ஆதனஞ்சேரி ஷாம் நகரில் டாஸ்மாக் கடை அமைய உள்ள இடத்தில் இருந்து 300 மீட்டர் துாரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது.இக்கடை அமைப்பதை கைவிட்டு, வேறு பகுதியில் அமைக்கவேண்டும்.இவ்வாறு அதில்கூறப்பட்டு உள்ளது.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:படப்பை அருகே, ஆரம்பாக்கத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகள் அமைந்திருந்தன. இங்கு, மது அருந்திவிட்டு சிலர், பள்ளி மாணவியருக்கு தொல்லை கொடுத்தனர். பொதுமக்கள் எதிர்ப்பால் அந்த கடைகள் மூடப்பட்டன. தற்போது, இந்த கடைக்கு மாற்றாக அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி அருகே டாஸ்மாக் கடை அமைக்கும் பணி நடப்பது வேதனையை அளிக்கிறது.இவ்வாறு அவர்கள்கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ