உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தொடர் மின் தடையால் ஊரப்பாக்கத்தில் அவதி

தொடர் மின் தடையால் ஊரப்பாக்கத்தில் அவதி

கூடுவாஞ்சேரி:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊரப்பாக்கம் ஊராட்சி பிரியா நகர் விரிவு இரண்டு மற்றும் கணபதி நகர், காமாட்சி நகர், அருள் நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று தொடர் மின் தடை ஏற்பட்டது.இது குறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:நேற்று காலை மற்றும் மதியத்தில், இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை என, தொடர்ந்து மின் தடை ஏற்பட்டது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், காலையில் சமையல் செய்யும் போது, மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட மின் சாதனங்களை உபயோகிக்கும் போது, திடீரென மின் தடை ஏற்படுகிறது.அதனால், சமையல் செய்ய முடியாமல், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, எங்கள் பகுதிக்கு சீரான மின் வினியோகம் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை