உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு

தற்கொலை தடுப்பு தின விழிப்புணர்வு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, மனநலப்பிரிவின் சார்பில், உலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி, விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது.செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் ரயில்வே மேம்பாலம் அருகில் துவங்கிய இந்த பேரணி, ஜி.எஸ்.டி., சாலை வழியாக சென்று, மருத்துவமனை அருகில் நிறைவடைந்தது. இதில், டாக்டர்கள், மருத்துவ மாணவர்கள், செவிலியர் கல்லுாரி, செவிலியர் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.அதன்பின், மருத்துவமனை பயிலரங்கத்தில், மாணவர்கள் நாடகம், கவிதை, கட்டுரை வாயிலாக, தற்கொலை தடுப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரங்கேறின.இதில், டாக்டர் மற்றும் எழுத்தாளர் சிவபாலன், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பத்மநாபன், நிலைய மருத்துவர் டாக்டர் முகுந்தன், மனநலப்பிரிவு தலைவர் டாக்டர் சுகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி