உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கோடை பாதுகாப்பு வழிமுறை மதுராந்தகத்தில் விழிப்புணர்வு

கோடை பாதுகாப்பு வழிமுறை மதுராந்தகத்தில் விழிப்புணர்வு

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி 24 வார்டுகளை உள்ளடக்கியது. தற்போது, கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால், பொதுமக்கள் பகல் நேரங்களில் வீடுகளுக்குள் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.வெப்ப அலை பாதிப்பிலிருந்து, பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், மதுராந்தகம் நகராட்சியின் முக்கிய இடங்களில், வெப்ப அலையில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது.மதுராந்தகம் பழைய நகராட்சி அருகே, மதுராந்தகம் நகராட்சி சார்பில் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. அதன் அருகே, அனல் காற்று வீசும் காலங்களில், கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு பதாகை வைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி