மேலும் செய்திகள்
மதுக்கடையில் கோட்டாட்சியர் திடீர் ஆய்வு
3 hour(s) ago
தெருவில் கிடந்த மோதிரம் போலீசில் ஒப்படைத்த மாணவர்
6 hour(s) ago
பிசியோதெரபி மருத்துவ முகாம்
6 hour(s) ago
மாமல்லபுரம்:மாமல்லபுரம், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில், இரண்டு டாஸ்மாக் கடைகள் இயங்குகின்றன. சாலை அருகிலேயே இயங்கும் கடையில், தினசரி சராசரியாக 5 லட்சம் ரூபாயும், உட்புற பகுதி கடையில், தினசரி சராசரியாக 1 லட்சம் ரூபாயும் விற்பனை நடப்பதாக கூறப்படுகிறது.பிரதான பகுதி கடைகளான இவற்றில், முன்பு அதிக விற்பனை நடந்து, தற்போது படிப்படியாக விற்பனை குறைந்து வருவதாக புகார் எழுந்தது.அதிகாலை முதலே, தனிநபர்கள் டாஸ்மாக் மது விற்றும், ஊழியர்களே வெளிநபர் விற்பதற்கு உடந்தையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கலெக்டர் அருண்ராஜ், இக்கடைகளில் திடீர் ஆய்வு நடத்த அறிவுறுத்தினார்.இதற்கு முன் ஆய்வு நடத்த முயன்ற போது, அதுகுறித்து தகவல் கசிந்துவிட்டதால், ஆய்வு செய்வது தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், சப் - கலெக்டர் நாராயணசர்மா, நேற்று முன்தினம் இரண்டு கடைகளிலும், தாசில்தார் ராதாவுடன் ஆய்வு செய்தார். இரண்டு கடைகளின் வருவாய் குறைவது, கள்ளச்சந்தையில் டாஸ்மாக் மது விற்கப்படுவது குறித்து ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினார். பதிவேடுகளை ஆய்வு செய்து, ஊழியர்கள் முறையாக பணியாற்ற வேண்டும் என, அறிவுறுத்தினார்.
3 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago