உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மாமல்லை சுற்றுலா வளர்ச்சி கடைகளுக்கு டெண்டர்

மாமல்லை சுற்றுலா வளர்ச்சி கடைகளுக்கு டெண்டர்

மாமல்லபுரம்,:மாமல்லபுரம் கடற்கரை கோவில் அருகில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக விடுதி வளாகம் உள்ளது. கைவினைப் பொருட்கள் விற்பனை கருதி, இங்கு 20 ஆண்டுகளுக்கு முன், ஒன்பது கடைகள் கட்டப்பட்டன. சிற்பக் கலைஞர்கள், ஓராண்டு குத்தகை பெற்று வியாபாரம் செய்தனர்.குத்தகை காலம் முடிந்ததும், 'டெண்டர்' விடுவதாக தெரிவித்த நிர்வாகம், அதற்கு ஏற்பாடு செய்யவில்லை. நாளடைவில், கடைகள் பயனின்றி வீணாகின. 2022 நாட்டிய விழாவின்போது, 108 திவ்யதேச கோவில்கள் கண்காட்சி நடத்திய தனியார் நிறுவனம், ஊழியர்கள் தங்குவதற்காக, கடைகளை சூழ்ந்திருந்த புதரை அகற்றி, கட்டடத்திற்கு வெள்ளையடித்தனர்.கடைகளை பராமரித்து, ஆண்டு குத்தகைக்கு அளித்தால், நிர்வாகத்திற்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தியும் வெளியிடப்பட்டது.இதையடுத்து, கடைகளை குத்தகைக்கு அளிக்க முடிவெடுத்துள்ள சுற்றுலா வளர்ச்சி கழக நிர்வாகம், 'டெண்டர்' பெற்றுள்ளது. கட்டட சுவர், கூரை கான்கிரீட் ஆங்காங்கே பெயர்ந்தும், ஜன்னல்கள் சேதமடைந்தும் உள்ளதால், அவற்றை சீரமைக்கவும் நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து, சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாகத்தினர் கூறியதாவது:ஒன்பது கடைகளுக்கும், ஐந்து பேர் மூடி முத்திரையிட்ட 'டெண்டர்' அளித்துள்ளனர். அவற்றை தலைமை நிர்வாகத்தினரிடம் அளித்துள்ளோம். அதிகபட்ச தொகைக்கு கோரியுள்ள நபர்களிடம் குத்தகை அளிக்கப்படும். கட்டடத்தில் உள்ள சிறிய சேதங்களை, குத்தகைதாரரே புதுப்பிக்க வேண்டும். இதன் காரணமாகவே, மூன்றாண்டுகள் குத்தகைக்கு அளிக்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை