உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வளைவாக கட்டப்படும் மழைநீர் கால்வாய் பொதுமக்கள் எதிர்ப்பால் சீரமைக்க முடிவு

வளைவாக கட்டப்படும் மழைநீர் கால்வாய் பொதுமக்கள் எதிர்ப்பால் சீரமைக்க முடிவு

பம்மல்:பல்லாவரம் - குன்றத்துார் சாலை, பம்மல், சங்கர் நகர் காவல் மையத்தில் இருந்து பிரிந்து செல்கிறது, திருநீர்மலை சாலை.இது, சென்னை புறவழி மற்றும் வெளிவட்ட சாலைகளை இணைப்பதால், கனரகம் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினம் செல்கின்றன.அதிக போக்குவரத்து உடைய இச்சாலையில், மழைநீர் கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.சங்கர் நகர் காவல் மையத்தில் இருந்து, இடது புறத்தில் சில மீட்டர் துாரத்திற்கு கால்வாய் கட்டி, பாதியில் விட்டுள்ளனர். அதேபோல், வலது புறத்தில், ஆங்காங்கே சில மீட்டர் துாரத்திற்கு கட்டப்பட்டுள்ளது.இந்த நிலையில், பம்மல் சார் - பதிவாளர் அலுவலகம் அருகே இடது புறத்தில், சாலையோரம் காமராஜர் மார்பளவு சிலை, மின்மாற்றி உள்ளன. அந்த இடத்தில், கால்வாய் கட்டுவதற்கு வசதியாக, காமராஜர் சிலை சற்று பின்நோக்கி நகர்த்த, அப்பகுதி மக்கள் முடிவு செய்துள்ளனர். ஆனால், மின்மாற்றி மட்டும் அப்படியே உள்ளது.இந்த நிலையில், அங்கு மின்மாற்றியை அகற்றாமல், கால்வாயை வளைத்து கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, கால்வாயை நேராக கட்ட வலியுறுத்தி வருகின்றனர்.நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், 'மின்மாற்றியை அகற்றி, நேராக கட்ட காத்திருந்தோம். ஆனால், மாற்று இடமில்லாததால் மின்மாற்றியை அகற்ற முடியவில்லை. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மின்மாற்றியை ஒட்டி, நேராக கால்வாய் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !