மேல்மருவத்துார்:அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கிளியா நகர் ஊராட்சி தலைவியானசித்ரா, தன் கணவர் சுரேஷை, அதே பகுதி யைச் சேர்ந்த தி.மு.க., ஒன்றிய துணை செயலர் தேவ், 50, என்பவர் தாக்கியதாக, மேல்மருவத்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணைக்கு பின் கூறியதாவது:நேற்று முன்தினம், ஊராட்சிக்குட்பட்ட குடிநீர் டேங்க் பைப் வால்வுகளை, பணியாளர்களுடன் சரி செய்து கொண்டிருந்த சுரேஷிடம், மேல்மருவத்துார் போலீசார், வேறொரு வழக்கு சம்பந்தமாக, சம்மன் வழங்க, ஒரு நபரை பற்றி விசாரித்துள்ளனர்.அப்போது, தி.மு.க., ஒன்றிய துணைச் செயலரான தேவ்விடம் கேட்கக் கூறி, சுரேஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.அதன்படி, போலீசார் தேவிடம் விசாரித்தனர். போலீசார் சென்ற பின், சுரேஷ் வேலை செய்த பகுதிக்கு வந்த தேவ், சுரேஷிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கண்ணாடி பாட்டிலால் தாக்கியுள்ளார்.இதில், இடது கையில் காயம் ஏற்பட்ட சுரேஷ் மயங்கினார். மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனையில் சுரேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். சுரேஷை தாக்கிவிட்டு தலைமறைவாக உள்ள தேவ் என்பவரை தேடி வருகிறோம்.இவ்வாறு அவர்கள்கூறினர்.
சோத்துப்பாக்கத்தில் ஒருவர் கைது
மேல்மருவத்துார் அடுத்த சோத்துப்பாக்கம் ஊராட்சி தலைவரான ஸ்ரீதர், 62, திருவள்ளுவர் நகரில், ஊராட்சிக்கு சொந்தமான பகுதியில் நடந்த சாலை அமைக்கும் பணியை பார்வையிட சென்றார். அப்போது, சாலைப் பணிக்கு இடையூறாக, சாலையில் ஜூலியஸ் சீசர், 51, என்பவர் நிறுத்தியிருந்த காரை, வேறு பகுதியில் நிறுத்துமாறு ஸ்ரீதர் கூறியுள்ளார். இதில், இரு வருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது, ஊராட்சி தலைவர் ஸ்ரீதரை, ஜூலியஸ் சீசர் அசிங்கமாக பேசி, கைகளால் தாக்கியுள்ளார். இதில், காயமடைந்த ஸ்ரீதரை மீட்ட அப்பகுதிவாசிகள், மேல்மருவத்துார் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஜூலியஸ் சீசரை நேற்று கைது செய்து,மதுராந்தகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,சிறையில் அடைத்தனர்.