உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / துாய்மைபணியாளரை கடித்து குதறிய நாய்

துாய்மைபணியாளரை கடித்து குதறிய நாய்

சென்னை, சென்னை, கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் குமார், 45. இவர், கடந்த இரு ஆண்டுகளாக கோயம்பேடு சந்தையில், ஒப்பந்த அடிப்படையில் துாய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.கடந்த 19ம் தேதி பணி முடிந்து, காய்கறி சந்தை,'சி' மற்றும் 'டி பிளாக்' இடையே நடந்து சென்று உள்ளார். அப்போது எதிரே வந்த தெரு நாய் ஒன்று, திடீரென குமாரின் காலில் கடித்துள்ளது.அவர் காலை உதறியும், நாய் விடாமல் கடித்ததால், வலியால் துடித்துள்ளார்.இதைப் பார்த்த அங்கிருந்தோர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார்.குமாரை தெரு நாய் கடித்த வீடியோ, சமூக வலைதளங்களில் வெளியானது.இதையடுத்து, அங்காடி நிர்வாக குழு அளித்த புகாரின்படி, கோயம்பேடுசந்தையில் திரிந்த மூன்று தெரு நாய்களை, மாநகராட்சி ஊழியர்கள் நேற்று முன்தினம் பிடித்துச் சென்றனர்.கோயம்பேடு சந்தையில் மாடுகள் மட்டுமின்றி, தெரு நாய்களும் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள், நுகர்வோர் பீதியில் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை