உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவர் கைது

வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்தவர் கைது

செங்கல்பட்டு, : செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகுமார், 34. ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.இவருக்கு திருமணமாகி, சுகன்யா, 28, என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கடந்த 20ம் தேதி, பாலமுருகன் வேலைக்கு சென்ற நிலையில், சுகன்யா குழந்தையுடன் வீட்டில் தனியாக இருந்தார்.அப்போது, வீட்டிற்கு வந்த மர்ம நபர், குடிக்க தண்ணீர் கேட்பது போல நடித்து, வீட்டின் உள்ளே புகுந்து, சுகன்யாவிடம் கத்தியை காட்டி மிரட்டி, 4 கிராம் தங்க கம்மலை பறித்து தப்பினார்.இச்சம்பவம் குறித்து, பாலகுமார் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சதுரங்கபட்டினம் பகுதியை சேர்ந்த ஞானபிரகாசம், 32, என்பவரை, போலீசார் நேற்று கைது செய்துவிசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை