உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி, ஆட்டுக்குட்டி மீட்பு

கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டி, ஆட்டுக்குட்டி மீட்பு

செய்யூர்:செய்யூர் அடுத்த மேற்கு செய்யூரைச் சேர்ந்தவர் ஆதிலட்சுமி 65; ஆடு வளர்த்து வருகிறார். நேற்று வீட்டின் அருகே ஆடுகள் மேய்ந்து கொண்டிந்த போது, ஆட்டுக்குட்டி ஒன்று தவறுதலாக அருகே இருந்த கிணற்றில் விழுந்தது; கிணற்றில் படிகள் இல்லை.ஆதிலட்சுமிக்கு நீச்சல் தெரியும் என்பதால், கயிறு வழியாக கிணற்றில் இறங்கி ஆட்டுக்குட்டியை மீட்க முயற்சித்தார். ஆட்டுக்குட்டியை துாக்கிக் கொண்டு மேலே ஏற முடியாமல் தவித்தார்.இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், செய்யூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இறங்கி, கயிறு கட்டி மூதாட்டியையும், ஆட்டுக்குட்டியையும்பத்திரமாக மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை