உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குளத்தில் மீன் பிடிக்க சென்றவர் மூழ்கி பலி

குளத்தில் மீன் பிடிக்க சென்றவர் மூழ்கி பலி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த வில்லியம்பாக்கம், கன்னியம்மன் கோவில் பின்புறம் உள்ள குளத்தில், நேற்று காலை ஆண் உடல் மிதப்பதை கண்ட கிராம மக்கள், செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இச்சம்பவம் குறித்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இறந்தவர் வில்லியம்பாக்கம், காந்தி தெருவை சேர்ந்த கோவிந்தசாமி, 48, என்பதும், நேற்று முன்தினம் இரவு, குளத்தில் மீன் பிடிக்க வந்தபோது, தண்ணீரில் மூழ்கி இறந்ததும் தெரிய வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை