உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வழிப்பறி திருடர்களை சுற்றி வளைத்த போலீசார்

வழிப்பறி திருடர்களை சுற்றி வளைத்த போலீசார்

திருக்கழுக்குன்றம்:செங்கல்பட்டு புறவழி சாலையில் திருக்கழுக்குன்றம், இரும்புலி பகுதியில் நேற்று அதிகாலை 3:00 மணியளவில், மர்ம கும்பல் கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பதுங்கி இருந்துள்ளனர். அந்த கும்பல், அப்பகுதியில் செல்வோரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்றனர்.இது குறித்து, திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றதும், மர்ம நபர்கள் தப்ப முயன்றனர். அவர்களை போலீசார் வளைத்தனர். போலீசாரின் வலையில் மூன்று பேர் சிக்கினர்; இருவர் தப்பினர். விசாரணையில், திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்த மன்சூர் அலிகான், 33, முகமது அஜீஸ், 23, அப்துல் காதர், 27, என்பது தெரிந்தது.மூவரையும் கைது செய்த போலீசார், தப்பிய ராஜு என்ற மாலிக், ராமு என்ற ரஹமதுல்லா ஆகியோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ