உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை அ.ம.மு.க., நிர்வாகிகள் மீது வழக்கு

பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னை அ.ம.மு.க., நிர்வாகிகள் மீது வழக்கு

சென்னை, : சென்னை, தி.நகர், சி.ஐ.டி., நகரைச் சேர்ந்தவர் பார்த்தசாரதி, 51. கார்பென்டரான இவர், அ.ம.மு.க., 141வது வட்ட செயலராகவும் உள்ளார். இவர், கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பழ வியாபாரம் செய்யும் ஏழுமலை,62, என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார்.ஏழுமலையும், அ.ம.மு.க., தென்சென்னை வடக்கு மாவட்ட துணைச் செயலராக உள்ளார்.இந்நிலையில், பார்த்தசாரதி எட்டு மாதங்களுக்கு முன் ஏழுமலையிடம் பெற்ற பணத்தை, இதுவரை திரும்ப செலுத்தவில்லை எனக் கூறப்படுகிறது.கடந்த 19ம் தேதி ஏழுமலை, தன் மருமகனும், 131வது வார்டு அ.ம.மு.க., வட்ட செயலருமான, கோடம்பாக்கத்தைச் சேர்ந்த செல்வம், 51, என்பவருடன் சென்று, பார்த்தசாரதியிடம் பணத்தை திரும்பக் கேட்டுள்ளார்.இதில், இருதரப்பிற்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த ஏழுமலை, மருமகனுடன் சேர்ந்து பார்த்தசாரதியை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த பார்த்தசாரதி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.பின், இதுகுறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ